விஜய் கூட பிகினில கூட எனக்கு ஒகே தான் - வசீகரா பட நடிகை பளீச்!
விஜய் பற்றிய தனது கருத்துகளை நடிகை காயத்ரி ஜெயராமன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
காயத்ரி ஜெயராமன்
தமிழில் பிரபுதேவா ஹீரோவாக நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், விஜய்யின் வசீகரா படங்களில் நடித்தார்.
அதன்பின், மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அனுபவம்
அதில், தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருக்கும் பல நடிகர்கள், நடிகைகளை தொந்தரவு செய்யாமல் இருப்பதில்லை. ஆனால், விஜய்யுடன் நடிக்கும் போது முழுமையான பாதுகாப்பு இருக்கும். நடிகைகளை விஜய் பார்ப்பதாக இருக்கட்டும்.
அவரது பார்வை என எதுவுமே நமக்கு தவறாக தெரியாது. விஜய் முன்னால் பிகினியில் நடித்தால் கூட அங்கே எனக்கு பாதுகாப்பு இருக்கும். நான் இதுவரை நடித்த பல ஹீரோக்கள் வெளிப்படையாக சொல்லாமல் இருந்தாலும்,
அவர்களது பார்வையில் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். ஆனால், விஜய் இதில் மிஸ்டர் கிளீன் என சர்டிபிகேட் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.