பாத்ரூம் கூட இருக்காது; நடுரோட்டில் அத பண்ண சொல்லுவாங்க - நடிகை காயத்ரி வேதனை!
திரைத்துறையில் மாற்ற வேண்டிய ஒரு விஷயம் குறித்து நடிகை காயத்ரி ஷங்கர் பேசியுள்ளார்.
காயத்ரி ஷங்கர்
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். தொடர்ந்து பொன்மாலை பொழுது, ரம்மி, சித்திரம் பேசுதடி, விக்ரம், மாமனிதன், பகீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
மேலும், மலையாளத்தில் என்னா தான் கேசு கொடு, கொரோனா பேப்பர்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ஷங்கர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் திரைத்துறையில் மாற்ற வேண்டிய ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார்.
வேதனை
அவர் கூறியதாவது "ஒரு ஷூட்டுக்கு போகும்போது அங்க எல்லாரும் ஆண்களா இருப்பாங்க. நான் மட்டும் தான் ஒரு பொண்ணா இருப்பேன். ஒரு பாத்ரூம் அரேஞ்ச் பண்ணணும்னு அவங்களுக்கு தோண்றதுக்கு நேரமாகும்.
ஒரே ஒரு பொண்ணுதான் என்பதால் அத பத்தி யோசிக்கவே மாட்டாங்க. சில நேரங்களில் ஒரு லொக்கேஷனில் இருந்து வேற லொக்கேஷனுக்கு போகும்போது ப்ரொடக்ஷன் காரையே நடுரோட்டில் நிறுத்தி ட்ரெஸ் மாத்த சொல்லுவாங்க" என்று வேதனை தெரிவித்துள்ளார்.