எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி!
பாஜகவிலிருந்து விலகிய நடிகை கெளதமி அதிமுகவில் இணைந்துள்ளார்.
நடிகை கௌதமி
பாஜகவில் உறுப்பினராக இருந்த நடிகை கௌதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 25 வருடங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதனால் மிக மனவேதனையுடன் பாஜகவில் இருந்து விலகுவதாக கௌதமி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னலையில், இன்று அதிமுகவில் அவர் இணைந்துள்ளார்.
அதிமுகவில் இணைந்தார்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
கடந்த மாதம் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்து கௌதமியும் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.