பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி - முக்கிய பதவி கொடுத்த எடப்பாடியார்
நடிகை கவுதமிக்கு அதிமுகவில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை கவுதமி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் கவுதமி. பல வருடங்களாக நடிப்பில் இருந்து விலகி இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் கமலுக்கு ஜோடியாக பாபநாசம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் நடித்தாலும் பல ஆண்டுகளாக கவுதமி அரசியலில் இருந்து வருகிறார். 1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர், வாஜ்பாய் காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.
பாஜகவிலிருந்து விலகல்
சில வருடங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், 2017 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இறங்கினார். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதன் பின் கட்சியை சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை அபகரித்ததாக புகார் கூறிய கவுதமி, கடத்த பிப்ரவரி மாதம் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் பதவி
தற்போது கவுதமியை, அதிமுகவின் கொள்கைப்பரப்பு துணை செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
மேலும் பாஜகவில் மாநில பட்டியலின அணி தலைவராக இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.