42 வயதில் கணவரை பிரியும் சூர்யா பட நடிகை - முடிவுக்கு வந்த 11 வருட மணவாழ்வு!
ஈஷா ஈஷா தியோல்-பாரத் தம்பதியினர் இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
ஈஷா தியோல்
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹேமமாலினி. இவர் கடந்த 1980-ம் ஆண்டு நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகள் ஈஷா தியோல் (42) தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாரத் தக்தானி எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஈஷா-பாரத் தம்பதியினர் இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
மதிக்க வேண்டும்
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இணக்கமான சூழலில் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளோம். முக்கியமான இந்த மாற்றத்தின் போது எங்கள் இரு குழந்தைகளின் நலனும் எங்களுக்கு அவசியம்.
இந்நிலையில், எங்கள் வாழ்க்கை தொடர்பாக நாங்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவை பிறர் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஷாவும்-பாரத்தும் பள்ளிப்பருவ காலகட்டம் தொடங்கி ஒருவரையொருவர் விரும்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.