அரபிக்குத்து பாடலுக்கு வடிவேலு மாதிரி குத்துப்போட்ட பிரபல நடிகை - வைரலாகும் வீடியோ
பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பிரபல நடிகை நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்தாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெஜ்டே, இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை அனிருத், சோனிட்டா காந்தி பாடியுள்ளனர். அரபிக்குத்து பாடலை பலரும் இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மாவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை துஷாரா விஜயன் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் நடிகர் வடிவேலுவின் நடன பாணியை பின்பற்றி இதில் நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.