இது 2வது திருமணமா? நடிகை திவ்யாவின் கணவர் பரபரப்பு புகார்!

Viral Video Serials
By Sumathi 3 மாதங்கள் முன்

பிரபல சீரியல் நடிகை திவ்யா மீது அவரது கணவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 நடிகை திவ்யா

பெங்களூரைச் சேர்ந்தவர் திவ்யா. தனது படிப்பை முடித்து விட்டு மாடலிங் பக்கம் திரும்பியுள்ளார். அப்போதுதான் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. கன்னட படங்கள் மூலமே அறிமுகமாகி சீரியல்களிலும் வலம் வந்துள்ளார்.

இது 2வது திருமணமா? நடிகை திவ்யாவின் கணவர் பரபரப்பு புகார்! | Actress Divya Sridhar Has Accused Her Husband

அதன்பின் பிரபல தொலைக்காட்சியில், பிரபல சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகினார். திடீரென சீரியலில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து. அதே சீரியலில் நடித்த அர்னாவ் என்பவரும் இவரும் காதலித்து வந்துள்ளனர்.

கணவர் அர்னாவ்

காதலால் நடிப்பு பாதித்து விடக்கூடாது என்பதால் காதலை மறைத்துள்ளனர்.அதனையடுத்து, அர்னாவ் பிரபல சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில், இருவரும் தங்களது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்தனர்.

இது 2வது திருமணமா? நடிகை திவ்யாவின் கணவர் பரபரப்பு புகார்! | Actress Divya Sridhar Has Accused Her Husband

மேலும், திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில், தனது கணவர் அடித்ததாகவும், அதனால் கருக்கு ஆபத்து எனவும் கூறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

 பரபரப்பு புகார்

அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவரது கணவர் அர்னாவ் போரூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகினார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், நடிகை திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்தாகி ஒரு குழந்தை உள்ளதாகவும்,

ஆனாலும் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.