ப்ளீடிங் ஆகிருச்சு...அடித்து உதைத்த கணவன் - கதறிய பிரபல சீரியல் நடிகை!

Viral Video Indian Actress
By Sumathi 2 மாதங்கள் முன்

பிரபல சீரியல் நடிகை திவ்யா தனது கணவர் அடித்ததாக கூறி கதறி அழுது வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நடிகை திவ்யா

பெங்களூரைச் சேர்ந்தவர் திவ்யா. தனது படிப்பை முடித்து விட்டு மாடலிங் பக்கம் திரும்பியுள்ளார். அப்போதுதான் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. கன்னட படங்கள் மூலமே அறிமுகமாகி சீரியல்களிலும் வலம் வந்துள்ளார்.

ப்ளீடிங் ஆகிருச்சு...அடித்து உதைத்த கணவன் - கதறிய பிரபல சீரியல் நடிகை! | Actress Divya Sridhar Has Accused Her Husband

அதன்பின் பிரபல தொலைக்காட்சியில், பிரபல சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகினார். திடீரென சீரியலில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து. அதே சீரியலில் நடித்த அர்னாவ் என்பவரும் இவரும் காதலித்து வந்துள்ளனர். காதலால் நடிப்பு பாதித்து விடக்கூடாது என்பதால் காதலை மறைத்துள்ளனர்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப்

அதனையடுத்து, அர்னாவ் பிரபல சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில், இருவரும் தங்களது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்தனர். மேலும், திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார்.

ப்ளீடிங் ஆகிருச்சு...அடித்து உதைத்த கணவன் - கதறிய பிரபல சீரியல் நடிகை! | Actress Divya Sridhar Has Accused Her Husband

இந்நிலையில் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், சமீபத்தில் தான் எனக்கும் அர்னாவ்க்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். இண்டு வருஷத்துக்கு முன்னாடி சீரியல் ஒன்றில் நாங்கள் நடித்தோம். அதற்குப் பிறகு நாங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம்.

கர்ப்பம்  

இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் எல்லாமே நான் தான் செட்டில் பண்ணி இருந்தேன். அப்போ கல்யாணப்பரிசு சீரியல் முடிந்த பிறகு அர்னாவ்க்கு எந்த ஒரு சீரியலும் இல்லாமல் தான் இருந்தார். நான் தான் மகராசி சீரியல் முடிச்சுகிட்டு இஎம்ஐ எல்லாம் கட்டிக்கிட்டு இருந்தேன்.

அது மட்டுமில்லாமல் அர்னாவ் தனியாகவும் லோன் வாங்கி இருந்தார். அதையும் நான் தான் கட்டியிருந்தேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ண கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணுனேன்.

 கணவன் டார்ச்சர்  

ஆனா என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிறுக்கு அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை.

என்னால் ஹாஸ்பிடலுக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது என்று திவ்யா கதறி அழுத வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.