அந்த நடிகர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் - நடிகை திவ்யா ஸ்பந்தனா பகீர்!

Divya Spandana Karnataka Actors Indian Actress Murder
By Jiyath Jun 15, 2024 10:23 AM GMT
Report

கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா பேசியுள்ளார்.   

கொலை சம்பவம்  

கன்னட நடிகர் தர்ஷனுக்கும் நடிகை பவித்ராவுக்கு திருமணம் மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை விமர்சித்து தர்ஷனின் ரசிகர் மன்ற உறுப்பினரான ரேணுகா சுவாமி என்பவர், பவித்ராவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த நடிகர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் - நடிகை திவ்யா ஸ்பந்தனா பகீர்! | Actress Divya Spandanac About Actor Darshan

இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் ஆள் வைத்து ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'செனாப் பாலம்' 359 மீட்டர் உயரம்.. ஈஃபிள் டவரை விட அதிகம் - ஜம்மு காஷ்மீரில் அதிசயம்!

'செனாப் பாலம்' 359 மீட்டர் உயரம்.. ஈஃபிள் டவரை விட அதிகம் - ஜம்மு காஷ்மீரில் அதிசயம்!

திவ்யா ஸ்பந்தனா 

இந்நிலையில் நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர் என்ற நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது. 

அந்த நடிகர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் - நடிகை திவ்யா ஸ்பந்தனா பகீர்! | Actress Divya Spandanac About Actor Darshan

ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. தர்ஷன் தேர்தலில் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியை தான் தழுவியுள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை நடிகை திவ்யா ஸ்பந்தனா பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.