கல்லூரிக்கு அரைகுறை ஆடையில் சென்ற நடிகை திவ்ய பாரதி - சமூக ஆர்வலர்கள் கண்டனம்
கல்லூரி நிகழ்ச்சிக்கு அரைகுறை ஆடையுடன் வந்ததாக இளம் நடிகை திவ்யபாரதி மீது புகார் எழுந்துள்ளது.
பிரபல மாடல் அழகியும், தமிழ் திரைப்பட நடிகையுமான நடிகை திவ்ய பாரதி கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷுடன் ஜோடியாக நடித்திருந்த இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்ய பாரதி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
2016-ல் கோவை இளவரசியாக முடி சூட்டிய திவ்யா ஐடி துறையில் பட்டம் வென்றவர். கல்லூரி காலத்தில் மாடலிங்கில் கலக்கி வந்த இவர் தற்போது அறியப்பட்ட நாயகியாக முதல் படத்திலேயே முன்னேறி உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது புதிய சிக்கலில் இந்த இளம் நாயகி சிக்கியுள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தாளியாக அழைப்பு வந்ததை அடுத்து நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை திவ்யபாரதி அரைகுறை ஆடையுடன் படு கவர்ச்சியாக வந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து கல்லூரி போன்ற இடத்துக்கு செல்லும் போது, நாகரீகமான ஆடை அணிந்து செல்வதுதான் நல்லது என் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan