தாலி மட்டும் தான் இருக்கு.. யாருமே கண்டுக்கவில்லை - கணவரை இழந்து கண்ணீர் விடும் கவர்ச்சி நடிகை!

Tamil Cinema Tamil Actress
By Vinothini Aug 19, 2023 04:30 PM GMT
Report

பிரபல கவர்ச்சி நடிகை தனது நிலைமை குறித்து கண்ணீருடன் பேசியுள்ளார்.

கவர்ச்சி நடிகை

தமிழ் சினிமாவில் டிஸ்கோ நடனம் மூலம் பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகளான அவர், 80-ஸ் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அவரது கவர்ச்சி நடனத்தில் வெளியான பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

actress-disco-shanti-trapped-in-poverty

இவர் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததும் தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதனால் ஐதராபாத்திலும் செட்டிலாகி வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஸ்ரீ ஹரி காலமாகிவிட்டார். அதனால் குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்த டிஸ்கோ சாந்தி தற்பொழுது வறுமையில் இருந்து வருகிறார்.

கண்ணீருடன் பேட்டி

இந்நிலையில், இவர் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், எந்த வருமானமும் இன்றி தற்போது வசித்து வருவதாகவும், இரண்டு வீடுகளில் வரும் வாடகையை வைத்துதான் குடும்பத்தை ஓட்டி வருவதாகவும் கூறியுள்ளார். "என் கணவர் உயிரோடு இருக்கும் நிறைய பேருக்கு பணம் கொடுத்திருந்தார்.

actress-disco-shanti-trapped-in-poverty

ஆனால் அவர் இறந்த பிறகு நாங்கள் பணம் கொடுத்த யாரும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. தவணை கட்ட முடியாததால் காரை கூட வங்கி எடுத்துச் சென்றுவிட்டது. இப்போது தாலி மட்டுமே மிச்சமிருக்கிறது. சினிமாவில் இருப்பவர்கள் எங்களை உயிரோடு இருக்கிறோமா என்று கூட பார்க்கவில்லை" என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.