அவர் மேல எனக்கு பைத்தியம், கல்லீரலில் ஊசி; இப்படிதான் இறந்தார் - டிஸ்கோ சாந்தி கண்ணீர்!
டிஸ்கோ சாந்தி தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை பகிர்ந்துள்ளார்.
டிஸ்கோ சாந்தி
80 களில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் டிஸ்கோ சாந்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகரான ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்ஷரா ஸ்ரீஹரி என்ற மகளும், ஷஷாங்க் ஸ்ரீஹரி, மேகம்ஷ் ஸ்ரீஹரி என்ற மகனும் உள்ளனர். இதில், அவரது மகள் அக்ஷரா ஸ்ரீஹரி நான்கு மாத குழந்தையாக இருந்தபோது இறந்துவிட்டார்.
கண்ணீர் பேட்டி
கணவர் 2013 ஆம் ஆண்டு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட தற்போது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இத்தனை ஆண்டுகள் ஆன போதும் என் கணவர் இறப்பில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை.
கணவர், குழந்தைகள் தான் என் வாழ்க்கையாக இருந்தது, அவர் படப்பிடிப்புக்கு சென்றாலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு,சமைத்து எடுத்துக்கொண்டு அவருடன் தான் சேர்ந்து சாப்பிடுவேன் அப்படி அவர் மேல் பைத்தியமாக இருந்தேன்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கண், வாய் முழுவதும் ரத்தமாக இருந்தது, இதைப்பார்த்து நான் துடித்தே போனேன். அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் நான் அவரின் நினைவுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.