ஆத்திரத்ததால் ஆவேசமடைந்த பிரபல நடிகை - காவல் ஆணையருடன் மோதல்..!
பிரபல நடிகை டிம்பிள் ஹயாத்தி காவல் ஆணையரின் காரை எட்டி, எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரகளையில் ஈடுபட்ட நடிகை
நடிகர் விஷாலுடன் வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை டிம்பிள் ஹயாதி. தனது கவர்ச்சிகரமான நடிப்பில் ரசிகர்களை கிரங்கடித்து வரும் டிம்பிள் ஹயாத்தி தனது வீரத்தை ஹைதராபாத் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேயிடம் வீரத்தை காட்டியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டிம்பிள் தனது காதலனுடன் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் காவல் ஆணையருடன் கார் பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று டிம்பிள் ஹயாதியின் காதல் கணவர் டேவிட் டிம்பிளின் காரை காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவின் கார் மீது மோத செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காரில் இருந்து ஆவேசமாக இறங்கி சென்ற டிம்பிள் ஹயாதி தனது பார்க்கிங்கில் உங்கள் காரை எப்படி நிறுத்தலாம் என்று கேட்டு காவல் ஆணையரின் காரை தனது காலால் எட்டி எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு வந்த போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டெ நடிகை டிம்பிள் ஹயாதியை சமாதானப்படுத்த முயன்றார்.
காவல் நிலையத்தில் புகார்
எவ்வளவு எடுத்துக்கூறியும் அடங்க மறுத்த டிம்பிள் காரை எட்டி, எட்டி உதைத்ததுடன் அவரையும் திட்டித்தீர்த்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவின் ஓட்டுனர் சேத்தன், ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி மீது புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகையை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். நடிகை டிம்பிள் ஹயாதி விசாரணைக்காக தன்னுடைய வக்கீலுடன் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
இதனிடையே அதிகாரத்தை பயன்படுத்தி தவறுகளை மறைக்க இயலாது என்று நடிகை டிம்பிள் ஹயாதி ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.