குட்டி பசங்க எல்லாம் கூப்ட்றாங்க; இதுல டேரக்டர், டி.ஓ.பி வேற.. - நடிகை திவ்யா துரைசாமி!

Tamil Cinema Tamil TV Serials Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jan 25, 2024 03:45 PM GMT
Report

தன்னை Tesla என்று அழைப்பது குறித்து நடிகை திவ்யா துரைசாமி பேசியுள்ளார்.

திவ்யா துரைசாமி

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்வை துவங்கியவர் நடிகை திவ்யா துரைசாமி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

குட்டி பசங்க எல்லாம் கூப்ட்றாங்க; இதுல டேரக்டர், டி.ஓ.பி வேற.. - நடிகை திவ்யா துரைசாமி! | Actress Dhivya Duraisamy Talks About Tesla

தொடர்ந்து, எதற்கும் துணிந்தவன், மாமன்னன், வாழை, படத்தில் நடித்துள்ளார். தற்போது, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர் போட்டோஷுட் புகைப்பங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Tesla அக்கா

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமி "இந்த Tesla என்ற வார்த்தைய எங்கிருந்து கண்டு புடிச்சாங்கன்னு தெரியல.

குட்டி பசங்க எல்லாம் கூப்ட்றாங்க; இதுல டேரக்டர், டி.ஓ.பி வேற.. - நடிகை திவ்யா துரைசாமி! | Actress Dhivya Duraisamy Talks About Tesla

இந்த பெயர் வைரலான நேரத்துல ஷூட் நடக்கும்போது, அத பார்க்க குட்டி பசங்க ஸ்பாட்டுக்கு வருவாங்க. அவங்க Tesla அக்கான்னு கூப்டுட்டு வருவாங்க. அப்பறம் ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் அப்படி கூப்பிடுவாங்க. என்ன சார் நீங்களுமா அப்டீன்னு கேப்பேன்.

முன்னாடியெல்லாம் பப்ளிக்ல, சோஷியல் மீடியா கமெண்ட்ஸ்ல கூப்டுட்டு இருந்தாங்க. இப்போ டேரக்டர், டி.ஓ.பி, மியூசிக் டேரக்டர் எல்லாம் அப்படி கூப்பிட்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியாது. சிரிச்சிட்டே அப்படியே விட்ருவேன்" என்று பேசியுள்ளார்.