வடிவேலுக்கிட்ட சான்ஸ் கேட்டுப் போனா இப்படி தான் பண்ணுவாரு - ரகசியம் உடைத்த பிரபல நடிகை!
நடிகர் வடிவேலு பற்றிய தகவல் குறித்து நடிகை தேவி ஸ்ரீ பேசியுள்ளார்.
நடிகர் வடிவேலு
தமிழ் திரையுலகில் 1988-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'என் தங்கை கல்யாணி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வடிவேலு. அதனைத் தொடர்ந்து 'என் ராசாவின் மனசிலே', 'சின்ன கவுண்டர்', 'அரண்மனை கிளி' படங்களில் நடித்து தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டார்.
சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் முழு திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அவருடன் நடித்துள்ள நடிகை தேவி ஸ்ரீ பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் வடிவேலு கூட பண்ணியது ஒரு படம் தான்.
அதிர்ச்சி தகவல்
அவர் இரண்டாவது படத்துக்கு கூப்பிடும் போது நான் விவேக் சாரின் 2 படங்களில் கமிட் ஆகிவிட்டேன். அதனால வர முடியலனு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் அவர் எனக்கு சான்ஸ் கொடுக்கவே இல்ல. விவேக் சாரின் படங்களுக்கு பின் நான் 12 படம் நடிச்சிட்டேன், அப்படி இருந்தும் என்ன வடிவேல் சார் கூப்பிடவே இல்ல.
நாய் சேகர் படத்துக்கு பின்னர் அண்மையில் கூட வடிவேலு சார் கிட்ட போன் பண்ணி பேசினேன். அப்போது போன் எடுத்ததும் யாருன்னு கேட்டாரு. தேவி ஸ்ரீ பேசுறேன்னு சொன்னேன். எந்த தேவி ஸ்ரீனு கேட்டாரு. உடனே இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்துல நடிச்சேனே சார்னு சொன்னதும், யார் அந்த குண்டச்சியானு கேட்டாரு.
ஆமா சார்னு சொன்னதும், நான் வாய்ப்பு கேட்கும் முன்பே, நான் கூப்பிடுறேன்மானு சொல்லிட்டு போனை வச்சிட்டாரு. அப்போது தான் வடிவேலு இப்படி தான் இருப்பாரு என தெரியவந்தது. அவர் மாறவில்லை. எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.