டவ்தே புயலால் சிதைந்த மும்பையின் சாலையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை...குவியும் கண்டனம்
cyclone tauktae
Actress Deepika singh
By Petchi Avudaiappan
மும்பையில் புயலால் விழுந்த மரங்களுக்கு நடுவே போட்டோஷூட் நடத்திய நடிகைக்கு கண்டனம் குவிந்து வருகிறது.
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன.அங்கு புயலால் 12 பேர் உயிரிழந்தனர்.
புயல் காரணமாக மும்பையில் சூறைக்காற்றுடன் 23 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. அப்போது காற்றின் வேகம் காரணமாக பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இவற்றின் இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய நடிகை தீபிகா சிங்கிற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.