‘எனக்கு தெரிஞ்ச ரொமான்சுன்னா இது தான்..என் கணவரோடு’ - தனது கணவருடனான பந்தம் பற்றி பேசி நெகிழ வைத்த தீபா!
சீரியல்கள், படங்கள் என சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை தீபா சங்கர்.
குக் வித் கோமாளி ஷோ போல் மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3-யிலும் ஒரு கலக்கு கலக்கிய தீபாவின் வெள்ளந்தி பேச்சு, யதார்த்த சிரிப்பு, வாழ்க்கையைப் பற்றிய நிதானமான பார்வை என அனைத்திற்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில், தற்போது தீபாவின் யூடியூப் பேட்டி ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. அப்படி என்ன தீபா பேசியுள்ளார் என ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், “பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யாதீங்க, பெண் பிள்ளைகளும் பாலியல் வன்முறைக்கு அஞ்சி அடங்கிப் போகாதீங்க. உங்களை யாராவது சீண்டினால் அதற்கு அவமானப்பட்டு படிப்பை நிறுத்தாதீங்க.
விமர்சனங்கள், சீண்டலகளை எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு லட்சியத்தை நோக்கிப் பயணியுங்கள்” என்று பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.
தொடர்ந்து, “அப்புறம் ஆண், பெண் பேதமெல்லாம் இப்போது மாறிவருகிறது. ஆணும் வேலைக்கு போகிறான், பெண்ணும் வேலைக்குப் போகிறாள். பெண்ணுக்கு நிதி மேலாண்மை தெரிந்தால் ஆண்கள் அவர்களிடம் ஈகோ பார்க்காமல் பணத்தைக் கொடுத்து நிர்வகிக்கச் சொல்லுங்கள்.
சமூகத்தில் மாற்றம் வந்தாலும்கூட ஒருசிலர் இன்னும் பிறரை விமர்சனம் செஞ்சிட்டே இருக்காங்க. பெண்களை தவறாக விமர்சனம் பண்ணாதீங்க. பொண்ணுங்க முந்தி மாதிரி இல்லை. அவங்க அறிவை பயன்படுத்தி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
எனக்கு என் கணவர் தான் எல்லாமே. என் கணவர் அவ்வளவு உறுதுணையாக இருப்பார். அவர் குடும்பத்தை கவனிச்சிக்கிட்டு என்னை வேலைக்கு அனுப்புகிறார். அதற்கு சோம்பேறி என்று அர்த்தமில்லை. அவர் என்னை மதிக்கிறார் என்று அர்த்தம்.
எனக்கு ரொமான்ஸ் என்றால் எப்போதெல்லாம் மூச்சுமுட்டும் அளவுக்கு சோகம் வருதோ அப்போ என் கணவரோடு பைக்கில் ஒரு ரவுண்ட் போவேன். அதுதான் எனக்கு பெரிய ரொமான்ஸ்” என யதார்த்தமாகப் பேசி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார் தீபா.