சகோதரர் பாலியல் தொல்லை; 2வது கணவருடன் சேர்த்து வையுங்கள் - சீரியல் நடிகை வழக்கு!
தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக்கூறி நடிகை தீபா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகை தீபா
அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தீபா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு சில காரணங்களால் விவாகரத்து பெற்றார்.
இதனையடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் கணேஷ் பாபு என்பவரை என்பவரை கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக தீபாவை பிரிந்து கணேஷ் பாபு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீபா சார்பில் மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இழிவுப்படுத்தினர்
அதில், "நானும், எனது கணவர் கணேஷ் பாபுவும் காதல் திருமணம் செய்தோம். எனது கணவரின் சகோதரர் ராமகிரி வாசன் மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருகிறார்.
கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் சாதி ரீதியாக என்னை இழிவுப்படுத்தினர். இதனால் கணவருக்கும், எனக்கும் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது அவர் பிரிந்து போய் உள்ளார்.
எனினும், என்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ்வதையே நான் விரும்புவதால், என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.