கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை எகிறி, எகிறி குதித்து குத்தாட்டம் - வீடியோ வைரல் - வெச்சி விளாசும் ரசிகர்கள்
கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரனீதா சுபாஷ். இவர் தமிழில் நடிகர் கார்த்திக், சூர்யாவுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதனையடுத்து, பிரனீதா சுபாஷ் தன்னுடைய நெருங்கிய நண்பரான தொழிலதிபர் நித்தின் ராஜ் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்தார் பிரனீதா.
இந்நிலையில், பிரனீதா சுபாஷ் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாட்டு ஒன்று எகிறி எகிறி குதித்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படி ஒரு வீடியோவா? என்று கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.