நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் - திரையுலகினர் இரங்கல்!

Tamil Cinema
By Sumathi Sep 18, 2024 04:49 AM GMT
Report

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்.

சகுந்தலா மறைவு

1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சகுந்தலா.

actress cid sakunthala

அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அதன்பின், திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்

பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்

திரையுலகினர் இரங்கல்

மேலும் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். சினிமாவிலிருந்து விலகிய பின் சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் - திரையுலகினர் இரங்கல்! | Actress Cid Sakunthala Passed Away

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.