சித்ரா ஆவியிடம் பேசுகிறீர்களா? சித்ரா மரணம் குறித்து மோசமான வீடியோ! - ரசிகர்கள் ஆவேசம்!
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து மோசமான வீடியோக்கள் வெளியாவதற்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பொதுமக்கள் மத்தியில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. எதிர்பாரத விதமாக அவர் தற்கொலை செய்துகொண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இந்த நிலையில் ஏராளமானோர் சித்ராவின் ஆவியிடம் பேசுவதாகவும், அவரது இறப்பை அசிங்கமாக கூறுவது என சித்ராவின் மரணத்தை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த சித்ராவின் ரசிகர்கள், சித்ரா குறித்த மோசமான வீடியோக்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இது குறித்து ரசிகர் ஒருவர், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.