ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை சேத்தனா ராஜ் மரணம் - மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு

1 மாதம் முன்

 21 வயதான கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வரதராஜ். இவருடைய மகள் சேத்தனா ராஜ். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

சேத்தனா ராஜ் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்வதற்காக நேற்று முன்தினம் காலை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சை நடந்துக் கொண்டிருக்கும்போது, சேத்தனா திடீரென சுயநினைவை இழந்தார். இதனையடுத்து, அவருக்கு அவசர உதவியை மருத்துவர்கள் அளித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சேத்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சேத்தனா சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அவருடைய மரணத்திற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையும், அலட்சியமுமே காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தனியார் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை சேத்தனா ராஜ் மரணம் - மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு | Actress Chetana Raj Death

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.