காதல் கணவரை பிரிந்த நிலையில் பிரபல நடிகருடன் பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா

Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vijay Deverakonda
By Petchi Avudaiappan Apr 28, 2022 10:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல நடிகருடன் சமந்தா பிறந்தநாளை கொண்டாடியதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் அவர் நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

காதல் கணவரை பிரிந்த நிலையில் பிரபல நடிகருடன் பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா | Actress Celebrate Her Birthday With Hero

இதனிடையே காதல் கணவர் நாகசைதன்யாவை பிரிந்த பிறகு சமந்தா கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. 

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே விஜய் தேவரகொண்டா உள்பட படக்குழுவினர் முன் சமந்தா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.