பொது இடத்தில் நடிகரின் கையை கடித்த நடிகை - அதிர்ச்சி வீடியோ

Hema Siva Balaji
By Anupriyamkumaresan Oct 11, 2021 02:30 PM GMT
Report

பொது இடத்தில் நடிகர் சிவ பாலாஜியின் கையை ஹேமா கடித்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரைப்பட நடிகர் சங்க தேர்தல் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலலில் பிரகாஷ் ராஜ் தலைமையிலான அணியும், விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டது.

இதில் விஷ்ணு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, பிரகாஷ் ராஜ் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவபாலாஜியின் கையைக் கடித்துள்ளார்.

பொது இடத்தில் நடிகரின் கையை கடித்த நடிகை - அதிர்ச்சி வீடியோ | Actress Byte Actor Hand In Public Place Videoviral

அப்போது எடுக்கப்பட்ட விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹேமா, சிவ பாலாஜியிடம் கேளுங்கள் என்று பதிலளித்தார்.

ஆனால் சிவ பாலாஜி இதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார். தேர்தலின் போது பிரகாஷ் ராஜ் அணிக்கும், விஷ்ணு மஞ்சுவின் அணிக்கும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது.

அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே ஹேமா அப்படி நடந்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.