பிரபல நடிகையை கற்பழித்த பிரபல தொழிலதிபர் கைது!
பிரபல நடிகை ஒருவர், தொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
வங்காளதேசத்தை சேர்ந்த புகழ் பெற்ற இளம் நடிகை போரி மோனி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசியாவின் சிறந்த 100 திரை நட்சத்திரங்களின் பட்டியலில் போரி மோனியும் இடம் பிடித்தார்.

இந்நிலையில், வங்காளதேசத்தின் மிகப்பெரும் தொழில் அதிபர்களில் ஒருவரான நசீர் முகமது தன்னை கற்பழித்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் நடிகை போரி மோனி பேஸ்புக் மூலம் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
மேலும் அவர் இது தொடர்பாக தான் சட்ட அமலாக்க துறையை அணுகியபோது தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், எனவே தனக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பேஸ்புக் பதிவு மூலம் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரிக்கை விடுத்தார்.

நடிகை போரி மோனியின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வங்காளதேச போலீசார் தொழிலதிபர் நசீர் முகமதை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் சென்ற தந்தை தொடருந்து மோதி பலி : மகள் படுகாயம் IBC Tamil
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil