5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் பிரபல நடிகை - வரவேற்கும் ரசிகர்கள்

bhavana mollywood malayalamcinema actressbhavana NtikkakkakkoruPremondarnn
By Petchi Avudaiappan Mar 19, 2022 04:29 PM GMT
Report

பிரபல நடிகை பாவனா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மலையாளம், தமிழ், கன்னடம் என பல மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பாவனா கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான ஆதம் ஜாண் சினிமாவில் நடித்திருந்தார்.அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் சினிமாக்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதேசமயம் மீடியாக்களிடமும் வெளிப்படையாக பேசாமல் இருந்த அவர் உலக மகளிர் தினத்தில் `வி த வுமன் ஆஃப் ஆசியா' கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன்ஹால்' நிகழ்வில் கலந்துக் கொண்டு பல நிகழ்வுகளை வெளிப்படையாக பேசினார். சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலை ஏற்பட்டதாகவும், அப்போது சிலர் எனக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் கூறிய பாவனா அந்த வாய்ப்புக்களை வேண்டாம் என மறுத்ததாக கூறினார். 

மேலும் விரைவில் மலையாள சினிமாவுக்கு திரும்பவும் வருவேன் என  பாவனா கூறியிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' என்ற பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ள தகவலை வெளிப்படுத்தியிருந்தார். இதன் போஸ்டரை நடிகர் மம்மூட்டி வெளியிட, இப்படத்தை ஆதில் மைமுனத் அஷ்ரப் இயக்குகிறார். 

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை பாவனானுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.