நடிகை பாவனா பாலியல் வன்கொடுமை வழக்கு : கதறும் நடிகர் திலீப்

bhavana rapecase dilip
By Irumporai Jan 06, 2022 05:12 AM GMT
Report

நடிகை பாவனா கடந்த 2017ஆம் ஆண்டில் கேரளாவில் நள்ளிரவில் கடத்தப்பட்டார். இந்த வழக்கின் பின்னணியில் இருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் அவர் ஜாமீனில் வந்திருக்கிறார். இதுகுறித்த வழக்கு எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடந்த சம்பவத்தில் 2022 பிப்ரவரி மாதத்திற்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

இந்த நிலையில் நடிகர் திலீப் கேரள டிஜிபி அணில் காந்தியிடம் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் நடிகை பாவனா பலாத்கார வழக்கில் என்னை சிக்க வைக்க போலீஸ் முயற்சி செய்கிறது.

பாலச்சந்திரகுமார் கூறியதாக வெளியான தகவலின் பின்னணியில் போலீசார் தான் இருக்கிறார்கள். இதன்மூலம் எனக்கு எதிராக சதி வேலை செய்வதாக சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாலச்சந்திர குமாரின் புகார் தொடர்பாக நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்தி அறிக்கையை வரும் ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.