கட்டாய கருக்கலைப்பு.. முன்னாள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை!
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை புகார்
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார்.
5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று தெரிவித்து இருந்தார்.
வீடு முற்றுகை?
அதன் அடிப்படையில், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராமநாதபுரத்தில், மணிகண்டனின் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றார்.
தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்து காரில் அனுப்பி வைத்தர். அப்போது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றியதாகவும்,
தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே வழக்கை வாபஸ் பெற்றதாகவும் நடிகை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.