பிரபல கவர்ச்சி நடிகையின் சகோதரர் மர்ம மரணம்; பல்வேறு குற்ற வழக்குகள் - கொலையா?
கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மர்ம மரணம்
சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியை சேர்ந்தவர் கவர்ச்சி நடிகை மாயா. இவர் பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அத்தை ஆவார். இவருக்கு விக்கி என்கிற விக்னேஷ்குமார் (40) என்ற மகன் இருந்தார்.
விக்கி தசரதபுரம், 8வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவரின் வீட்டிற்கு சென்ற நண்பர் ஒருவர் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது விக்னேஷ்குமார் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
தனியாக வசித்து வரும் விக்னேஷ்குமாரின் வீட்டு அறை முழுவதும் காலி மது பாட்டில்கள் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் அவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா? கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விக்கி என்கிற விக்னேஷ் குமார் மீது போலீசை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.