Tuesday, Jul 22, 2025

தனுஷ் ரசிகர் பாலியல் சீண்டல் செய்தாரா...? தர்ம அடி கொடுத்த இளம் நடிகை...!!

Dhanush Priyanka Arul Mohan Captain Miller
By Karthick 2 years ago
Report

தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வரும் பொங்கல் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றது.

தொல்லை

இன்னும் ஒரு வாரத்தில் படம் வெளிவரும் நிலையில், படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தனுஷின் ரசிகர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த விழாவில் படத்தில் நடத்த பல துணை நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.

actress-attacked-dhanush-fan-in-event-bcoz-harass

ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்ட இந்த விழாவில் துணை நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரை அந்த நடிகையும் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஐஸ்வர்யா ரகுபதி

நடிகை ஐஸ்வர்யா ரகுபதியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார் ரசிகர் ஒருவர். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அத்துமீறியதாக கூறும் நிலையில், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ரகுபதி.

இந்த துணை நடிகை ஐஸ்வர்யா ரகுபதியிடம் தான் முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கூல் சுரேஷ் மாலை அணிவித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.