அப்பா வயதுள்ள இயக்குநர் தவறாக நடந்து கொண்டார் - நடிகை வேதனை
அப்பா வயதில் உள்ள இயக்குநர் தவறாக நடந்து கொண்டதாக நடிகை அஸ்வினி நம்பியார் பேசியுள்ளார்.
அஸ்வினி நம்பியார்
பாரதிராஜாவின் புதுநெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஸ்வினி நம்பியார். அதை தொடர்ந்து கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இதனையடுத்து, திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆன இவர், நீண்ட காலமாக நடிப்பில் இருந்து விலகியிருந்தார். சிங்கப்பூரில் சீரியல் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த இவர், தற்போது கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான சுழல் 2 என்னும் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
தவறாக நடந்த இயக்குநர்
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "மலையாள சினிமாவில் உள்ள பெரிய இயக்குநர் ஒருவர், படம் குறித்து விவாதிப்பதற்காக என்னை அவரின் அலுவலகத்திற்கு வர சொன்னார். எப்போதும் நான் ஷூட்டிங் செல்லும் போது என் அம்மா உடன் இருக்கும் அம்மா அன்று உடல் நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை.
actre
நான் அவரின் அலுவலகத்திற்கு சென்ற போது என்னிடம் தவறாக நடந்து கொண்டார். என்ன நடக்குதுன்னு புரிந்து கொள்ளவே எனக்கு நேரமானது. அந்த டீன்ஏஜ் வயதில் யார் தப்பா நடந்துக்கிட்டது? அவர் மீது தவறா இல்லை நான் இடம் கொடுத்து விட்டேனா என எனக்கு தெரியவில்லை.
தைரியம் வந்தது
வீட்டுக்கு சென்ற பிறகு அம்மாவிடம் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால் நான் ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்த அம்மா என்ன ஆச்சு என கேட்ட போது நடந்தை கூறினேன். உன் மேல் எந்த தவறும் இல்லை அவர் தவறுதான் என கூறினார்.
அதன் பிறகு எனக்கு எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வந்தது. அதன்பிறகு அந்த இயக்குநரை நான் நேரில் சந்திக்கவில்லை. ஆனால் இப்போது அவரை நேரில் சந்தித்தால் கூட எப்படி இருக்கீங்க என என்னால் வெறுப்புணர்வு இல்லாமல் பேச முடியும். நெகடிவிட்டியை மனசுக்குள்ளயே வச்சிருந்தா அது என்னைத்தான் பாதிக்கும்" என கூறினார்.