50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்த அறந்தாங்கி நிஷா - எப்படி தெரியுமா?
அறந்தாங்கி நிஷா 50 நாட்களில் 14 கிலோ குறைத்துள்ளார்.
அறந்தாங்கி நிஷா
ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள் என பல துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்திய நிஷா, பிக்பாஸ் சீசன் 4 மூலம் பெரும் பிரபலமானார்.

ஜெயிலர், கோலமாவு கோகிலா 2, திருச்சிற்றம்பலம், ராயன், சீமராஜா போன்ற படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். நிஷா தனது ‘கருப்பு ரோஜா’ யூடியூப் சேனல் மூலம் சமையல், Vlogs, lifestyle வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.
எடை குறைப்பு
இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “கடந்த 50 நாட்களில் நான் 14 கிலோ எடை குறைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் எப்படி எடை குறைப்பு சாத்தியப்பட்டது என்பது பற்றி அந்தப் பதிவில் விளக்கமான தகவல் எதுவும் இல்லை.

நிஷா கடந்த சில மாதங்களாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அதன்மூலம் தான் உடல் எடை குறைத்ததாக தனது யூ-ட்யூப் சேனலான கருப்பு ரோஜாவில் தெரிவித்து வந்தார்.
எனவே உணவுமுறை மூலமாகவே அவர் எடை குறைத்திருப்பார் என கூறப்படுகிறது. மேலும், அவர் நிபுணர் பரிந்துரையின் கீழ் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டே எடை குறைத்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.