திருமணம் ஆகி இரண்டே வருடம் - விவாகரத்தை அறிவித்த விஜய் பட நடிகை
நடிகை அபர்ணா வினோத் தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.
அபர்ணா வினோத்
கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்தவர் நடிகை அபர்ணா வினோத்(28), மலையாள சினிமாவில் இரு படங்களில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பரத் நடிப்பில் வெளியான நடுவண் என்ற படத்தில் நடித்துள்ளார்.
விவாகரத்து
ரினில் ராஜ் என்பவரைக் காதலித்து வந்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 2 வருடம் ஆகியுள்ள நிலையில் தனது காதல் கணவரை பிரிவதாக அபர்ணா வினோத் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீண்ட யோசனைக்குப் பிறகு என் திருமணப் பந்தத்தை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன். இது எளிதான விஷயமல்ல என்றாலும் என் வளர்ச்சிக்கும் என் காயம் குணமாவதற்கும் இதுவே சரியானதாக இருக்கும் என்றும் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.