நடிகை அபர்ணா தற்கொலை.. தங்கையுடன் தகாத உறவில் கணவர் - அதிர்ச்சி பின்னணி!
அபர்ணாவின் தற்கொலை செய்தது குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மலையாள நடிகை
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் கரமனை பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர். 33 வயதான இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சினிமா மற்றும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வந்த அபர்ணா நாயருக்கு திருமணமாகி சஞ்சித் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், கடந்த வாரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரின் தகாத உறவு
இந்நிலையில், அபர்ணாவின் கணவர் சஞ்சித்திற்கும், அபர்ணாவின் தங்கைக்கும் இரண்டு வருடத்திற்கு முன் கள்ள உறவு இருந்துள்ளது. இது குறித்து அபர்ணா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சஞ்சித் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் கஷ்டப்படுவதை பார்த்து அபர்ணா அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர், அவரது கணவர் அவரை பழிவாங்கும் விதமாக தினமும் குடித்துவிட்டு வந்து தொந்தரவு செய்துள்ளார்.
பிறகு அவரை நடிக்கக்கூடாது எண்டன்று கூறியுள்ளார், அதனால் அவர் ஒரு மருத்துவமனையில் வரவேற்பாளராக வேலை செய்துள்ளார். மேலும், கணவர் தினமும் குடித்துவிட்டு வருவதால் மன அழுத்தத்தில் இருந்த அபர்ணா நாயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.