மேடையில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவன்.. - ரசிகர்கள் கண்டனம்...!

Aparna Balamurali Viral Video
By Nandhini Jan 19, 2023 07:57 AM GMT
Report

 மேடையில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அபர்ணா பாலமுரளி -

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனையடுத்து, நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

வரும் ஜனவரி 26-ம் தேதி ‘தங்கம்’ என்ற மலையாள படம் வெளியாக உள்ளது. சஹீத் அராபத் இயக்கியுள்ள இப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

actress-aparna-balamurali-delinquent-student

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவன் -

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘தங்கம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவி ஒருவர் தவறாக நடந்து கொண்டார்.

மேடையில் அபர்ணா நாற்காலியில் அமர்ந்திருக்க, மேடை மீது ஏறி வந்த மாணவன் ஒருவர் அபர்ணாவிற்கு கை கொடுத்து எழுப்பி அவர் மேல் தோளில் கையைப் போட்டு அனைவர் முன்பும் அநாகரீகமாக நடந்து கொண்டார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அந்த மாணவனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.