வேட்டைக்காரன் ஷூட்டிங்கின் போது விஜய் அப்படி செய்தார் - ஓப்பனாக சொன்ன அனுஷ்கா!
நடிகை அனுஷ்கா வேட்டைக்காரன் படப்பிடிப்பு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்.
அனுஷ்கா
அனுஷ்கா கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.
தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார். எனவே அந்த படத்தில் இருந்தே அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. அப்படி இருந்தும் கூட அனுஷ்காவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை.
பேட்டி
இந்நிலையில் தான் வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து அனுஷ்கா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அனுஷ்கா பேசியதாவது 'வேட்டைக்காரன் படத்தில் 'என் உச்சி மண்டைல' பாடல் ஷூட்டிங்கிற்காக செட்டுக்கு சென்றேன். அங்கு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்த விஜய் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஷாட் ரெடியானதும் கேமரா முன்பு இருவரும் சேர்ந்து நின்றோம். கேமரா ஆன் ஆனதும் விஜய்யின் நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு எப்படி அவரால் இப்படி ஆட முடிகிறது என்று யோசித்தேன். அவர் எப்படி அப்படி ஆடினார் என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை" என்று பேசியுள்ளார் அனுஷ்கா