கல்யாணம் ஆகாமலேயே அம்மாவாக நினைக்கும் அனுஷ்கா - பரவும் விமர்சனம்!
அனுஷ்கா நடிப்பில் வெளியாகியிருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி கதைகளம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சு இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார். அதன்பின் பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.
அப்படி இருந்தும் கூட அனுஷ்காவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. மேலும் 41 வயதாகியும் அனுஷ்கா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி
தற்போது தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்து வெளியாகியுள்ளது. அதில், தனிமையில் ஒருவர் எவ்வாறு வேதனையை அனுபவிக்கிறார் என்பதை அனுஷ்கா எதார்த்தமாக காட்டி இருக்கிறார்.
மேலும் ஆண்கள் மீது உள்ள வெறுப்பின் காரணமாக கல்யாணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு அனுஷ்கா வந்திருப்பதாக கதை நகர்கிறது.
நீண்ட நாட்களுக்கு பின் திரையில் அனுஷ்காவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.