ஆபாச பட படப்பிடிப்பின் போது நேர்ந்த விபரீதம் - நடிகை பரிதாப பலி
ஆபாச பட நடிகை அன்னா பாலி உயிரிழந்துள்ளார்.
அன்னா பாலி
பிரேசில் நாட்டை சேர்ந்த ஆபாச பட நடிகை அன்னா பீட்ரிஸ் பெரேரா ஆல்வ்ஸ்(anna beatriz pereira alves). 27 வயதான இவர் ரசிகர்களால் அன்னா பாலி என அழைக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது, அன்னா பாலி திடீரென தங்கியிருந்த அறையின் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
உயிரிழப்பு
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அன்னா பாலி, பால்கனியில் இரு ஆண்களுடன் இனைந்து ஆபாச படத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது பால்கனியில் இருந்து விழுந்துள்ளார்.
எதிர்பாராதவிதமாக விழுந்தாரா அல்லது தள்ளி விடப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னா பாலியின் உயிரிழப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.