19 வயதில் படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - பிக்பாஸ் நடிகைக்கு நேர்ந்த கொடூரம்!
19 வயதிலேயே தனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருந்ததாக நடிகை அங்கிதா லோகாண்டே தெரிவித்துள்ளார்.
அங்கிதா லோகாண்டே
சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் நடிகை அங்கிதா லோகாண்டே போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மூன்றாவது ரன்னர் அப்பாகவும் வந்தார்.
ஆரம்பத்தில் டிவி சீரியல்களில் நடித்து வந்த அங்கிதா, மணிகர்ணிகா மற்றும் பாகி 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அங்கிதாவிடம், அதிகளவில் படங்களில் நடிக்காமல் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் "டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் தான் வாய்ப்புகளை தேடி வந்தேன். ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடிக்க கமிட் ஆனேன். மும்பையில் நடைபெற்ற ஆடிஷனுக்கு நானும் எனது கோ-ஆர்டினேட்டரும் சென்றிருந்தோம்.
வேதனை
அப்போது, என்னுடன் வந்த நபரை வெளியே நிற்க வைத்து விட்டு என்னை மட்டும் உள்ளே அழைத்துப் பேசினர். இந்த படத்தில் நீங்க தான் ஹீரோயின் என சொல்லி விட்டு, கொஞ்சம் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்றனர்.
அப்போது எனக்கு வெறும் 19 வயதுதான். எப்படி இப்படி அசிங்கமா கேட்பாங்கன்னு கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. ஒரு மாதிரி லோ ஆகிவிட்டேன். உடனே முடியாது என அங்கிருந்து எழுந்து விட்டேன். கூடுதலாக பணமும் கிடைக்கும் என கன்வின்ஸ் செய்தனர். உங்கள் படத்துக்கு திறமையான நடிகை வேண்டும் என நினைத்து வந்தேன்.
ஆனால், உங்கள் தயாரிப்பாளருக்கு படுக்க ஒரு பெண் தான் வேண்டும் என்றால் என்னை விட்டுவிடுங்கள் என திட்டிவிட்டே வந்து விட்டேன். அதன் பின்னர் படங்களில் நடிக்கவே வேண்டாம் என சின்னத்திரை பக்கம் வந்து விட்டேன்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.