இறந்த தந்தையின் உடலை தோளில் சுமந்துச் சென்ற பிரபல நடிகை - பரபரப்பு!
தந்தை உடலை நடிகை ஒருவர் சுமந்துச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை அங்கிதா
பாலிவுட்டின் பிரபல நடிகை அங்கிதா லோகண்டே. குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார்.
தொடார்ந்து, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக 'பவித்ரா ரிஷ்தா' என்ற பிரபலமான நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். அதன்பின், தி குயின் ஆஃப் ஜான்சி' தான் இவர் நடித்த முதல் படம்.
தந்தை மறைவு
தற்போது, ரன்தீப் ஹூடாவுடன் சுதந்திர வீர் சாவர்க்கரில் நடிக்கிறார். அதில் அவரது மனைவியாக நடிக்கிறார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவரது தந்தை ஷஷிகாந்த் லோகண்டே(68). வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு மும்பையில் உள்ள ஒஷிவாராவில் நேற்று நடைபெற்றது. அப்போது ஆம்புலன்ஸில் இருந்து மயானத்திற்கு ஷஷிகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது தனது தந்தையின் உடலை அங்கிதா சுமந்து சென்றார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.