போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை கைது
போதைப்பொருள் வழக்கில் நடிகை உட்பட 9 பேரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து விசாரணையில் விக்னேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார், அவரிடம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து வெங்கடேஷ்குமார் கைது செய்யப்பட்டார், இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகை அஞ்சு கிருண்ஷா, துணை நடிகை நிகிதா, உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
மலையாளத்தில் ஆகாசம் கடன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சு கிருஷ்ணா, ஓம் வெல்லமலை படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
9 பேரையும் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் இருந்து ஆறு கிராம் மெத்தம்பேட்டமைன், 7 கிராம் ஒஜி கஞ்சா, 15 கிராம் கஞ்சா, புகைபிடிக்கும் போங், ஒன்பது மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வடக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றும் பேருந்துகளுக்கு இறுகும் பிடி : விடுக்கப்பட்ட அறிவிப்பு IBC Tamil
தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு IBC Tamil