அந்த நபருடன் உறவில் இருந்தேன்; அப்போ நடந்த அந்த விஷயங்கள்.. நடிகை அஞ்சலி ஓபன் டாக்!
தான் ஒரு மோசமான நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக நடிகை அஞ்சலி பேசியுள்ளார்
நடிகை அஞ்சலி
இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் ரசிகர் பலரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து ஆயுதம் செய்வோம், தூங்கா நகரம், கோ, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, இறைவி, தரமணி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலியை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தார்.
பேட்டி
தற்போது மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அஞ்சலியிடம், ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் "நான் ஒரு மோசமான நபருடன் உறவில் இருந்தேன். ஒருகட்டத்தில் அந்த உறவில் நடந்த விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்" என்று பேசியுள்ளார்.