இது எனக்கு 5வது திருமணம்; நான் என் வீட்டில் இல்லை - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி!

Anjali Tamil Cinema Marriage
By Sumathi Apr 06, 2024 04:27 AM GMT
Report

திருமண வதந்திக்கு நடிகை அஞ்சலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை அஞ்சலி 

நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

actress anjali

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். 2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கும் காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அவர் எனக்கு நல்ல நன்பர்தான் என அஞ்சலி விளக்கமளித்திருந்தார்.

தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' வெளியாகவுள்ளது. ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் அஞ்சலி பங்கேற்று பேசுகையில்,

பீரியட்ஸ் சமயத்தில் இதை மட்டும் பண்ணவே மாட்டேன் - நடிகை அஞ்சலி ஓபன்டாக்!

பீரியட்ஸ் சமயத்தில் இதை மட்டும் பண்ணவே மாட்டேன் - நடிகை அஞ்சலி ஓபன்டாக்!

திருமண வதந்தி

”என்னை ஒவ்வொரு படியாக 50-வது படம்வரை தூக்கி விட்டது ரசிகர்கள்தான். எனவே என்னுடைய தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு திருமணம் என்று பரவி வரும் வதந்திகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வதந்திகள் மூலம் இதற்கு முன்பு 4 முறை எனக்கு திருமணம் செய்து வைத்தனர் நிச்சயமாக எனக்கு திருமணம் நடக்கும்.

இது எனக்கு 5வது திருமணம்; நான் என் வீட்டில் இல்லை - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி! | Actress Anjali Responds Rumours On Her Wedding

ஆனால் இப்போது இல்லை. நான் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் என் வீட்டில் வசிக்கவில்லை. வெளியில் வசிக்கிறேன். அதனால், என் வீட்டில் தங்கியிருப்பவர் வாடகை கொடுத்துவிட்டுச் சென்றால் நன்றாக இருக்கும்.

நான் ஈ.எம்.ஐ செலுத்துகிறேன். எனவே, நான் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அந்த வதந்திகள் பொய்யானவை." எனத் தெரிவித்துள்ளார்.