அந்த மாதிரி ஆளுங்களுக்கு இப்படி தான் பண்ணனும், சும்மா விடக்கூடாது - நடிகை அஞ்சலி பேட்டி!
நடிகை அஞ்சலி நாயர் பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படைடியாக பேசியுள்ளார்.
அஞ்சலி நாயர்
தமிழ் சினிமாவில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் சித்தா. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஸ்ரா ஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி பேசும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படத்தில் நடித்த அஞ்சலி நாயர் த்ரிஷ்யம் 2 படத்தில் போலீசாக நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது, அப்பொழுது நடிகர் சித்தார்த் கால் செய்து சித்தா படத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையோட அம்மாவாக நடிக்க அழைத்துள்ளார்.
ஆபாச தளத்தில் என் முகம்.. சின்ன வயது புகைப்படம், இப்படியெல்லாம் பண்றாங்க - மார்பிங்கால் மனமுடைந்த நடிகை!
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் கன்சீவ் ஆகிவிட்டேன். எனக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை. அதற்கு பிறகு இதை பற்றி நான் சித்தார்த் சாரிடமும் இயக்குனரிடமும் சொன்னேன். ஆனால், சித்தார்த் சார் தான் வாழ்த்துக்கள் சொல்லி, நீங்கதான் நடிக்கணும், நல்லா பண்ணுவீங்க என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.
நான் ஏழாம் மாதம் வரை படத்தில் நான் நடித்துக் கொடுத்தேன். சித்தார்த் சார் மாதிரி ஒரு நல்ல மனிதனை பார்க்கவே முடியாது. அதேபோல் கேரளாவில் நிறைய போக்ஸோ கேஸ் பதிவாகி இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை பாலியல் குற்றவாளிகள்.
நடுரோட்டில் நிற்க வைத்து தண்டனை கொடுக்கனும். அப்போதான் இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது என்று ஒவ்வொரு ஆண்களுக்கும் பயம் வரும். குற்றங்களும் குறையும்" என்று கூறியுள்ளார்.