தெருவீதிகளில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடந்த பிரபல நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்

Hollywood
By Irumporai Mar 22, 2023 04:53 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரபல நடிகை நிர்வாணமாக சாலைகளில் சென்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் அமாண்டா பெய்ன்ஸ் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் போது பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் ஏ கேர்ள் வான்ட்ஸ் உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பெயரை எடுத்துக்கொடுத்தன, அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்ட அமாண்டா பெய்ன்ஸ்கு Bipolar Disorder என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுகின்றது.

தெருவீதிகளில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடந்த பிரபல நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Amanda Walk Areas Roamed Street

தெருவில் நிர்வாண நடை

இந்நிலையில் தான் அமண்டா பைனஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்தார். அப்போது அவர் திடீரென்று உடலில் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக தெருவில் நடந்து சென்றார். இதை பார்த்தவர்கள் அதிர்சசியடைந்தனர். மேலும்அவர் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அதன் டிரைவர்களிடம் பேசியுள்ளார். அப்போது டிரைவர் ஒருவரிடம் தான் மனநல காப்பகத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தெருவீதிகளில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடந்த பிரபல நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Amanda Walk Areas Roamed Street

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று அமண்டா பைனஸை மீட்டனர். இதையடுத்து மனநல நிபுணர் அவரை பரிசோதித்து பார்த்தார். அப்போது அவர் பைபோலார் டிஸ்சார்டர்' எனும் மனநல பிரச்சனைக்கு சிகிச்சை இருப்பது தெரிய வந்தது .  

மருத்துவர்கள் சிகிச்சை

இந்த நிலையில் அமண்டா பைனஸ்கு மருத்துவர்கள் உதவியுடன் மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என நிபுணர் ஒருவர் முடிவு செய்து உள்ளார். இதன்படி, அவர் பல நாட்கள் வரை மனநல சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக, இதுபோன்ற விசயங்களில் 3 நாட்களில் சிகிச்சை முடிந்து வெளியே வரும் சூழலில், நோயாளியின் தேவைக்கு ஏற்ப சிகிச்சை நீட்டிக்கப்படும். அமண்டாவுக்கு பைபோலார் டிஸ்சார்டர் என்ற மனநல பாதிப்பு உள்ளது என டி.எம்.இசட் என்ற அந்த பத்திரிகை தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் தற்போது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.