10 வருடம் செல்லத்தக்க ‘கோல்டன் விசா’ வழங்கி கவுரவித்த ஐக்கிய அரபு அமீரகம் - மகிழ்ச்சியில் அமலாபால்

actress amalapal golden visa
By Nandhini Dec 29, 2021 04:49 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகம் 10 வருடம் செல்லத்தக்க கோல்டன் விசாவை தொழிலதிபர்கள், முதலிட்டாளார்கள், பிரபலங்கள், விஞ்ஞானிகள், திறமைமிக்க மாணவர்கள் ஆகியோருக்கு வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது நடிகை அமலாபாலுக்கும் இந்த கோல்டன் விசாவை வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா வழங்கியது குறித்து நடிகை அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில் ஒருவராக உணர்கிறேன்.

இந்த புண்ணிய பூமி, உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகும், நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன். இது அழகு மற்றும் ஆடம்பரமான அம்சங்களைப் பற்றிய மதிப்பீடானதல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் பார்வை மற்றும் குறிக்கோள் எந்தளவு ஆக்கபூர்வமானதாகவும் மற்றும் நேர்மறையானதாகவும் உள்ளது என்பது பற்றியது.

இங்குள்ள மக்கள் அவர்கள் குணத்தால் பெரும் ஆச்சரியம் அளிக்கிறார்கள். இந்த அற்புதமான பாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காக துபாய் அரசு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை அமலா பால் தற்போது கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல மற்றும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமன்றி பாலிவுட்டில் ரஞ்சிஷ் ஹி சாஹி என்ற வெப் சீரீஸ் மூலம் இந்தியில் அறிமுகமாகி இருக்கிறார்.