திடீரென கல்யாணம் செய்துக் கொண்ட பிரபல நடிகை ... மாப்பிள்ளை யார் தெரியுமா?

By Petchi Avudaiappan May 04, 2022 06:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான அகல்யா வெங்கடேசன் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

திடீரென கல்யாணம் செய்துக் கொண்ட பிரபல நடிகை ... மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Akalya Venkatesan Got Married

ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அகல்யா வெங்கடேஷன் சில சீரியல்களிலும், தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்திலும் அவர் நடித்துள்ளார். 

இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அகல்யா வெங்கடேசனுக்கும் அருண் குமார் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பின் நிச்சயதார்த்தத்திற்கு மணப்பெண் கோலத்தில் அகல்யா வெங்கடேஷன் தயாரான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ட்ரெண்டானது. இதனைப் பார்த்த  ரசிகர்கள் எப்போது திருமணம் என கேட்டு வந்த நிலையில் தற்போது திடீரென மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

நேற்று திருவண்ணாமலையில் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. மாப்பிள்ளை உடன் எடுத்துக் கொண்ட திருமண புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் Happily Married என பதிவிட்டு தனக்கு திருமணம் ஆனதை அகல்யா வெங்கடேஷன் அறிவித்துள்ளார்.

மணமகன் அருண்குமார் தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சென்னையில் வரும் மே 8 ஆம் தேதி திரையுலக நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்களை அழைத்து பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.