ஆட்டோல ஒருத்தன் கை வைக்க பாத்தான் - ஐஸ்வர்யா ராஜேஷ் பகீர் தகவல்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி தொகுப்பாளராக பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக ஜெயித்த பிறகு அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின், அட்டகத்தி அமுதாவாக வெற்றி பெற்றார்.

தடாலடியாக இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக தனது மொத்த வித்தையையும் இறக்கினார். பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.
டிரைவர் ஜமுனா
தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். வத்திக்குச்சி இயக்குனர் பி கின்ஸ்லினின் அடுத்த படமான டிரைவர் ஜமுனாவுக்கு ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு படக்குழுவினர் பேட்டி ஒன்றை அளித்தனர். அதில் ஐஸ்வர்யா திரைப்படம் குறித்தும், சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்தார்.
அனுபவம்
அப்போது, நான் கல்லூரி படிக்கும்போது என் தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் என் பக்கத்தில் வந்து என் மீது கை வைத்தார்.
ஆட்டோவை நிறுத்த சொல்லி என்ன அண்னா இப்படி எல்லாம் கஸ்டமர்களை ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என கேட்டேன். அவரும் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துப்ப என்று சொல்லி திட்டினார் என தெரிவித்தார்.
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil