விஜய் சேதுபதி எனக்கு அது குடுத்தாரு; எப்போ கேட்டாலும் 4,5.. - ஓப்பனாக சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகர் விஜய் சேதுபதி குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி தொகுப்பாளராக, பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக ஜெயித்த பிறகு 'அவர்களும் இவர்களும்' படத்தின் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதன்பின், அட்டகத்தி அமுதாவாக வெற்றி பெற்றார். காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக தனது மொத்த வித்தையையும் இறக்கினார். பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.
தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
பேட்டி
இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "ஒருநாள் விஜய் சேதுபதிதான் எனக்கு அட்வைஸ் குடுத்தாரு.
நிறைய கதைகள் வர ஆரம்பிச்சதும், எனக்கு கன்பியூசன் ஆயிருச்சு. ஒரு தடவ மீட் பண்ணப்போ விஜய் சேதுபதி சொன்னாரு " ஐஷு.. எந்த கதையில என்ன இருக்கும்னே தெரியாது.
அதனால் எல்லா கதையும் கேளுங்கனு" சொன்னாரு. எனக்கு என்ன ஆச்சர்யம்னா.. எப்பயாவது அவர்கிட்ட பேசும்போது, என்ன பண்றீங்கன்னு கேட்டா "கதை கேக்குறேன்னு" சொல்லுவாரு. ஒரு நாளைக்கு 4,5 கதை. எப்படிங்க கேக்குறீங்கன்னு எனக்கு தோணும்" என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்.