டூ.. டூ.. டூ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை - உற்சாகத்தில் ரசிகர்கள்

actress dance Aishwarya Dutta video viral
By Anupriyamkumaresan Sep 23, 2021 07:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

பிக் பாஸ் பிரபல நடிகை ஐஸ்வர்யா தத்தா டூ டூ டூ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஐஸ்வர்யா, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த வரவேற்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

டூ.. டூ.. டூ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை - உற்சாகத்தில் ரசிகர்கள் | Actress Aishwarya Dutta Dance Video Viral

தற்போது மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் Condition apply’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதால் விரைவில் ரிலீசாகும் என தெரிகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது.

அனிரூத் இசையில் வெளியான ‘டூ.. டூ.. டூ’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்த பாடலுக்கு திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.